Wednesday, November 2, 2016

ஒத்த ரூபா தாரேன்

மாநகரப் பேருந்தில் வந்துகொண்டிருந்தேன்.
ஒரு பயணி 11 ரூபாய் சீட்டுக்கு 10 ரூபாய் கொடுத்துவிட்டு கூட்டமாய் இருந்ததால் முன்னே நகர்ந்து சென்றார்.

நிறைய நேரம் ஆகியும் அந்தப் பயணி மீதி பணம் ஒரு ரூபாய் தராததால் நடத்துனர் கடுப்பாகி "ஏம்பா எங்க முன்னாடி போயிட்டே.. இன்னும் ஒரு ரூபாய் கொடு..." என்றார். அந்தப் பயணி "இதோ தரேன்" என்று பையில் துழாவிவிட்டு "பத்து ரூபாயா இருக்கு பரவாயில்லையா?" என்றார். "நீ நூறு ரூபாய் நோட்டாயிருந்தாலும் கொடு. மீதி தருகிறேன்" என்றார் மீண்டும் கடுப்பாக.

பயணி ஒருவழியாய் ஒரு பத்து ரூபாய் தாளை வழியில் நிற்பவர்களிடம் கொடுத்தனுப்பினார்.

பணம் கையில் சேர்ந்ததும் நடத்துனர் சொன்னார்..........
"மீதியை இறங்குறப்போ வாங்கிக்கோ !!!!!"

#நடத்து(னர்)டா!

6 comments:

Syed I H said...

நடத்துனர் வாங்க மட்டும் தான் செய்வார். மீதி சில்லரை கொடுக்க மாட்டார். அவர் கொடுத்தால் சாமி கோபித்துக் கொல்லும்.

மோ.சி. பாலன் said...

yes ! Syed..

Unknown said...

அரசுத் துறை பலவற்றிலும் லஞ்சம் தாண்டவமாடுகிறது .அங்கெல்லாம் ஆயிரம் ஆயிரமாய் கொடுப்பவர்கள் ,கண்டக்டர் ஒரு ரூபாய் தரவில்லை என்று கேவலமாய் பேசுவது என்ன நியாயம் :)

ஸ்ரீராம். said...

சில்லறை விஷயங்கள்!

//கண்டக்டர் ஒரு ரூபாய் தரவில்லை என்று //

பகவான் ஜி... ஒரு ரூபாய் இல்லை! 9 ரூபாய்!

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை...

மோ.சி. பாலன் said...

பகவான்ஜி - உண்மைதான். பெரிய பெரிய கொள்ளைகள் எவ்வளவோ நடக்கின்றன. இது ஜிஜுபி தான்.

ஸ்ரீராம் - இதுதான் ஒன்பது ரூபாய் நோட்டு என்பதோ?

தனபாலன் - நன்றி