Saturday, July 6, 2013

சிறு பொன்மணி அசையும் - REMIX

உரல் குழவியும் சுழலும் அதில்

உழலும் பொருள் குழையும்

குழி மேவிடும் மாவது பூப் போல் மலரும்

விரல்கள் தொடவும் தொடரும் தடம் மாறாது

ராகம் தாளம் மாறிடாது ஆடும் கல்லும் பாடலோடு... (உரல் குழவியும்)


படியும் அரைப் படியும் எனக் கலந்தால் சரி விகிதம்

விடியும் வரை இருந்தால் புது மணமே உதயம்

படியும் அரைப் படியும் எனக் கலந்தால் சரி விகிதம்

விடியும் வரை இருந்தால் புது மணமே உதயம்

*அனலானது மஞ்சம் உடலானது பஞ்சும்

அனலானது மஞ்சம் உடலானது பஞ்சும்

சுவையும் எமைச் சுவையும் என அவையில் அவை கெஞ்சும்

விரல் என் வசம் விருந்துன் வசம் உருவாகிடும் பரவசமே (உரல் குழவியும்)
________________________________________

* அனலானது மஞ்சம் உடலானது பஞ்சும் - cotton-like soft Idlis getting baked in steam heat



6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பாடிப் பார்த்தேன்... அருமை... வாழ்த்துக்கள்...

மோ.சி. பாலன் said...

நன்றி தனபாலன்

கீதமஞ்சரி said...

மின்சாரமில்லாத வேளைகளில் பாடிக்கொண்டே ஆட்டுக்கல்லில் மாவாட்டினால் சிரமம் தெரியாது என்றே நினைக்கிறேன். மிக அழகான வார்த்தைக்கோவைகளால் ரசிக்கவைக்குமொரு பாடல். பாராட்டுகள் மோ.சி.பாலன்.

மோ.சி. பாலன் said...

நன்றி கீதமஞ்சரி

ஜீவி said...

புரிந்தது.

மோ.சி. பாலன் said...

நன்றி ஜீவி