Friday, April 20, 2012

பாதை

உப்பு மடச் சந்தியில் ( http://santhyilnaam.blogspot.com/2012/04/blog-post.html  )
ஹேமா அவர்கள் கீழ்க்கண்ட படத்தை வெளியிட்டு நமக்குத் தோன்றும்
எண்ணங்களை கவிதையாக எழுதச் சொன்னார்கள்.


அதற்கு அங்கு எழுதிய கவிதையை  இங்கும் வெளியிடுகிறேன்-
படத்திற்கும் எழுதத் தூண்டியதற்கும் ஹேமாவுக்கு நன்றிகள்.
______________________________________________________

வருவோர் போவோரை வேடிக்கைப் பார்க்க
நின்றுவிட்ட மரங்கள்..

யார்வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது கல்?

இப்படிப்பார்த்தால் பிரிகின்ற (உ)பாதை
அப்படிப்பார்த்தால் சேர்கின்ற பாதை
எப்படிப்பார்த்தாலும் இரு தூரப்புள்ளிககளை
எப்போதுமே இணைத்திருக்கும் பாதை.

4 comments:

கௌதமன் said...

உப்புமடச் சந்தியிலேயே படித்துவிட்டேன். நல்லா இருக்கு!

ஸ்ரீராம். said...

அங்கேயே பாராட்டி விட்டேன்... ! இங்கேயும் பாராட்டுகள்! ரசித்தேன்.

ஹேமா said...

வாழ்வியல் சொன்ன அருமையான கவிதை.ரசித்தேன் !

சிவகுமாரன் said...

எப்படிப் பார்த்தாலும்
அருமை
கவிதை